
கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும் முக்கியமே. இந்தப் புத்தகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் வழிமுறைகள், செயல்பாடுகள், கற்றலில் மாணவர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள், கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு உருவாகும் இடர்கள், கற்பித்தலின் இன்றைய சவால்கள் என இவற்றைக் குறித்து இப்புத்தகம் விரிவாக அலசுகிறது. நவீனக் கல்வி முறை, குழுக் கல்வி, சிறந்த மாணவர்களின் உருவாக்கத்தில் பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமான தேர்ந்த கையேடு இந்த நூல்.