
Click to Buy Aurality | Google Play | Audiobooks.com | Libro
இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை.
இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல்.லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார்.
₹160.00
Details
Author
Sakthivel Rajakumar | சக்திவேல் ராஜகுமார் Publisher
Swasam Publications Genre
வரலாறு | History Number of Pages
136 Published On
2022 Edition
1st Edition Language
Tamil