
ஒரு மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது? ஆவி அல்லது ஆன்மா என்று சொல்லப்படுவது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? ஆன்மா எங்கே வாழும்? ஆன்மாவின் பயணம் என்பது என்ன? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாத தனிமனிதனோ சமூகமோ இருக்க முடியாது. மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை அனைவரையும் துரத்தும் இக்கேள்விகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தையும் பல்வேறு தத்துவப் புத்தகங்களையும் முன்வைத்து இந்தப் புத்தகம் பதில் தேட முனைகிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் திரையை விலக்கும் இந்த நூல், மரணம் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்கி, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச் செய்கிறது. பரமாத்மாவை நோக்கிய பயணத்தில் ஜீவாத்மா உணரும் ரகசியங்களை எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது இந்த ‘மாற்று உலகம்’.