
கதைகள், நாவல்கள், திரைப்படங்கள் எல்லாமே ஒருவரது கற்பனையில் உருவாகும் விஷயங்கள் என்றாலும், ஏதோவொரு காரணத்தால் சில கதாபாத்திரங்கள் நம் மனத்தைவிட்டு அகலாது நமக்குள் உட்கார்ந்து கொள்ளும்.
எல்லா அனுபவங்களையும் நமக்கிருக்கும் ஒரே வாழ்வில் நாம் பெற்றுவிட முடியாது. வாழ்வின் சவால்களைச் சந்திக்கும் பக்குவத்தை நாம் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்துதான் பெறுகிறோம். இந்தப் புத்தகத்தில் வித்யா சுப்ரமணியம் அதைத்தான் செய்திருக்கிறார்.
அனுபவங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். வெற்றி தோல்வி, இன்பம் துன்பம், தியாகம் வஞ்சம், பிறப்பு இறப்பு என்ற இருமைகளை அதனதன் போக்கில் அணுகுவதையும் அதன்மூலம் அடையும் பக்குவத்தையும் இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.
தான் படித்தவற்றில் அப்படியே தேங்கிவிடாமல், அங்கிருந்து தொடங்கி தனக்கான புதிய உலகத்தைக் கண்டடைய வித்யா சுப்ரமணியம் மேற்கொள்ளும் சுயபரிசோதனையுடன் கூடிய தேடல் இந்த நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது.