
என்னைத் தூக்கில் போட வேண்டாம். அதற்கு பதிலாகத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்று விடுங்கள். நான் தூக்கிலே தொங்கினால் என் பாதங்கள் இந்தப் பாரத மண்ணில் சில நிமிடங்கள் படாமல் போய்விடும். என் தாய்மண்ணை என் பாதங்கள் தழுவாமலேயே நான் மரணமடைய நேரிடும். அதனால்தான் சுட்டுக் கொல்லச் சொல்கிறேன்’. - பகத்சிங் பகத்சிங் - இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய ஒரு பெயர். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது வயது 23. பகத்சிங்கின் போராட்டங்களையும் வாழ்க்கையையும் பேசும் இந்தப் புத்தகம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் தொட்டுச் செல்கிறது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலா பாக் படுகொலை, சைமன் குழு, லாகூர் சதி வழக்கு போன்ற அனைத்து இணை வரலாற்றையும் தெளிவாக எளிமையாக எழுதி இருக்கிறார் ப.சரவணன்.