
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுத் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பான திருப்பங்களையும் அதிரடிகளையும் கொண்டவை, அவற்றை இந்தப் புத்தகம் அதே சுவாரசியத்துடன் காட்சிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தொடங்கி, பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் முழுமையான தேர்தல் வரலாறு, அந்தச் சமயத்தில் நாட்டில் நிலவிய அரசியல் கணக்குகள், மக்களின் எண்ணவோட்டம், கூட்டணிப் பஞ்சாயத்துகள், மத்திய அரசின் தலையீடுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல்வாதிகளின் சுட்சி மாறும் காட்சிகள், இவற்றால் உண்டான எதிர்பாராத முடிவுகள் என அனைத்து விவரங்களையும் விரிவான புள்ளிவிவரங்களுடன் தெளிவாகப் பதிவுசெய்கிறது இந்த நூல். அரசியல் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அனைத்துக் கட்சி விசுவாசிகளுக்கும் பயன்படும் ஆவணம் இது.