


தென்னாப்பிரிக்காவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இலான் மஸ்க் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு தொழிலதிபராக, அமெரிக்க அதிபரைத் தீர்மானிக்கும் ஒரு வல்லமை மிக்க மனிதராக, அதே அமெரிக்க அரசாங்கத்தில் முக்கியப் பதவியை வகிக்கும் ஓர் ஆளுமையாக வளர்ந்திருக்கிறார்.
கற்பனைக்கெட்டாத அவரது வளர்ச்சிக்குப் பின்னால் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது. இலான் மஸ்க்கின் கடின உழைப்பு. தனது கனவை நிஜமாக்க அவர் செலுத்திய அர்ப்பணிப்பு, சக தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் தோழமை உணர்வு என இந்தப் புத்தகம் இலான் மஸ்கின் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக நம்முன் வைக்கிறது.
இலான் மஸ்க்கை அறிந்துகொள்வது சாதனை செய்யத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சாதனை செய்தவர்களுக்கும் ஊக்கமளிக்கும். ஆம்! தொழிலதிபர்களுக்கே ஊக்கமளிக்கும் ஒரு தொழிலதிபர் உண்டென்றால் அவர் இலான் மஸ்க்.