
Click To Buy Amazon
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகி விட்டன. ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்றவற்றின் உண்மையான பரிமாணத்தை ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை, பின்னும் வரவில்லை. இனி வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன. அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை அரசுக் கொடுங்கோன்மை' என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. 'தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்' என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் இது அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை. நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது. இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள், நெருக்கடி நிலைக் காலத்தை நேரில் கண்ட அனுபவத்தை அடையவேண்டும், இந்திய அரசியல் வரலாற்றில் இப்படிப்பட்ட அத்தியாயமும் உண்டு என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.ராதாகிருஷ்ணன் இந்த நூலை ஆழமாகவும் விரிவாகவும் ஆதாரங்களோடும் எழுதி இருக்கிறார். ₹240.00
Details
Author
R.Radhakrishnan | ஆர்.ராதாகிருஷ்ணன் Publisher
Swasam Publications Genre
Politics | அரசியல் Number of Pages
192 Published On
2023 Edition
1st Edition Language
Tamil