
Click To Buy Amazon
பார்த்திபன் கனவு' எழுத்தாளர் கல்கி எழுதிய முதல் வரலாற்றுப் புனைவு. இதன் பின்னரே 'சிவகாமியின் சபதம்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' போன்ற நாவல்களை எழுதினார். இந்த இரண்டு நாவல்களுக்கும், குறிப்பாக 'சிவகாமியின் சபதம்' நூலுக்கு இந்த நாவலை ஒரு முன்னோட்டம் என்று கூடச் சொல்லலாம். 'பார்த்திபன் கனவு' நூலில் பயன்படுத்தி இருக்கும் பல்வேறு உத்திகளைப் பின்னர் விரிவாக்கித் தனது மற்ற வரலாற்று நாவல்களில் கல்கி பயன்படுத்தி இருக்கிறார்.
பார்த்திபன் கனவு' நாவல் மூன்று பாகங்களைக் கொண்ட நாவல். அதன் சுருக்கம் இந்த நூல். கல்கியின் மூலக் கதையின் அழகு கொஞ்சம் கூடச் சிதையாமல் இந்தச் சுருக்கமான நாவலைப் படைத்திருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.
மிகப் பெரிய நாவல்களைப் படிக்க நேரமில்லாத இந்தத் தலைமுறையினருக்கு இந்தச் சுருக்கமான அறிமுகம் உதவும். அதேபோல், எப்போதோ முழு நாவலையும் படித்து முடித்துவிட்டர்களுக்கு, மூல நாவலின் கதையையும் எழுத்தையும் மீண்டும். நினைவுக்குக் கொண்டு வரவும் உதவும்.