
பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகே இந்தியா கல்வி, மருத்துவம். தொழில்நுட்பம் எனப் பல்வேறு தளங்களிலும் முன்னேறத் தொடங்கியது இன்று இந்தக் கருத்து அனைவர் மனத்திலும் ஆழப் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலையோ இதற்கு நேர்மாறானது என உலகுக்கு உரைத்தவர் காந்தியச் சிந்தனையாளர் தாம்பால்.
பிரிட்டிஷார் இந்தியாவின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்கு முந்தைய காலகட்டத்தில் (பொ.யு. 1750) ஆங்கிலேய விவசாயியைவிட ஓர் இந்திய விவசாயியின் ஆண்டு வருமானம் பல மடங்கு அதிகம், அந்த விவசாயியின் விவசாய உற்பத்திக் கருவிகளோ மேற்கத்திய கருவிகளைவிட தாமானவை.
விவசாயத்தில் மட்டுமல்லாது கல்வி, துருப்பிடிக்காத இரும்பு உற்பத்தி, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் சிறந்திருந்தார்கள் என்றும், இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் பார்வை தவறானது என்றும், இந்தியா ஏற்கெனவே ஒரு வளமான அறிவு மையமாக இருந்தது என்றும் தரம்பால் இந்த நூலில் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
இந்தியாவின் உண்மையான கலாசார மரபுகளை மீட்டெடுக்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.
இந்தப் புத்தகத்தைத் தமிழில் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார் ஶ்ரீதர் திருச்செந்துறை.பழங்கால இந்தியாவின் செழுமையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள ஓர் ஆவணமாகத் திகழும் நூல்.