
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இருந்தால் எப்படி இருக்கும்? இன்னமும் ஏன் வீட்டில் இருக்கிறோம், எப்போது ஆஃபிஸ் போவோம் என்று ஆர்வமாக தினமும் வேலைக்குப் போனால் எத்தனை நன்றாக இருக்கும்? அலுவலக பரமபத விளையாட்டில் உங்களை விழுங்கக் காத்திருக்கும் பாம்புகளை ஏணிப்படிகளாக மாற்றிக் கொள்ள உதவும் புத்தகம் இது. இனி நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுவீர்கள். உங்களுக்கு எல்லோரையும் பிடிக்க ஆரம்பித்துவிடும். எப்படி? சின்ன சின்ன கதைகளுடன் விளக்குகிறார் சாது ஸ்ரீராம்.