
முதலில், ஹிந்துக்கள் ஆயிரம் வருடங்களாக முஸ்லிம்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்பது அப்பட்டமான பொய். இந்தியா முழுமையும் 'என்றைக்குமே' இஸ்லாமியர்களுக்கு அடிமையாக இருந்ததில்லை. ஆனானப்பட்ட முகலாய ஆட்சி வெறும் சுமார் இருநூற்றம்பது வருடங்கள்தான். 1500-களில் ஆரம்பித்த முகலாய ஆட்சி 1731-ஆம் வருடம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்தியாவை ஆண்டவர்கள் மராத்தாக்கள். 1731-க்குப் பிறகு இந்தியாவின் தலைநகரமாக இருந்தது தில்லியில்லை. மகாராஷ்டிரத்தின் பூனா இந்தியாவின் தலைநகராக இருந்தது. பெயரளவுக்கு தில்லியில் முகலாய பாதுஷாக்கள் ஆட்சியில் இருந்தாலும் மொத்த இந்தியாவும் பூனா பேஷ்வாக்களின் ஆட்சியில் இருந்தது. முகலாய பாதுஷாக்கள் மராத்தாக்களிடம் அடங்கி அவர்கள் கொடுப்பதனை வாங்கிப் பிழைத்தார்கள். பிரிட்டிஷ்காரன் இந்தியாவைப் பிடித்தது முகலாயர்களிடமிருந்து அல்ல. பேஷ்வாக்களிடமிருந்துதான். இஸ்லாமிய சுல்தான்கள், பாதுஷாக்கள், ஜஹாம்பனாக்கள் எல்லாம் அவர்கள் ஆண்டபோதுமே தமது தலைநகரிலிருந்து ஐம்பது மைல்கள் சுற்றளவில் மட்டுமே அதிகாரமுடையவர்களாக இருந்தார்கள். இந்தியாவின் பெரும்பகுதி 'எப்போதுமே' ஹிந்துக்களால்தான் ஆளப்பட்டு வந்தது. எனவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை ஆயிரம் வருடங்கள் ஆண்டார்கள் என்று யார் சொன்னாலும் அதைப் புறம் தள்ளுங்கள். ஏனென்றால் அதில் சிறிதும் உண்மையில்லை. அதோடு ஆயிரக்கணக்கான இந்துப் போராளிகள் இஸ்லாமிய அரசர்களை ஓட ஓட விரட்டியும் இருக்கிறார்கள். அந்த உண்மைகளை உங்களுக்குச் சிறிதளவேனும் அறிமுகம் செய்வதுதான் இந்த நூலின் நோக்கம்.
Non-returnable
₹180.00
Details
Author
P.S.Narenthiran | பி.எஸ்.நரேந்திரன் Publisher
Naya Bharat Publications Genre
Spirituality | ஆன்மீகம் Number of Pages
160 Published On
2025 Edition
1st Edition