
மார்க்கெட் ப்ளேஸ் (Market place) எனப்படும் வர்த்தகச் சந்தையில் மாறிக்கொண்டே இருக்கும் வாடிக்கையாளர் தேவைகளையும், கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைச் சட்டங்களையும், தூக்கத்தைக் கெடுக்கும் போட்டியாளர்கள் பற்றியும் மிகச் சிறப்பாக விவரிக்கும் நூல், சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ஸ்பெஷாலிட்டி ஸ்டோர்ஸ், டிஸ்கௌண்ட் ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால் மற்றும் மின் வர்த்தகம் (ஈ-டெய்ல்) என நவீன வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்கள் குறித்தும், அவற்றின் சாதக பாதகங்கள் குறித்தும், பாதகமான அம்சங்களைச் சரிசெய்வதற்கான நுணுக்கங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது. பொருட்களுக்கான விலை நிர்ணயம், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், விற்பனை செய்தல் என வர்த்தகத்தின் பல்வேறு படிநிலைகள் குறித்து ஆழமாக அலசுகிறது. மின் வர்த்தகம் (ஈ-டெய்ல்) மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அதுகுறித்த பலதரப்பட்ட விவரங்களை வழங்குவது இப்புத்தகத்தின் சிறப்புகளுள் ஒன்று.