
உலகின் பெரும் கப்பல் படை பாரதத்தில்தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வர வாஸ்கோடகாமா வழி கண்டுபிடிக்கவில்லை. நம் குஜராத் வணிகரிடம் கேட்டு, அவருடைய கப்பலைப் பின் தொடர்ந்து வந்து தெரிந்துகொண்டிருக்கிறார்கள். பாரதத்தின் நெசவுத் தொழில் உலகிலேயே உன்னத நிலையில் இருந்திருக்கிறது. நம் கணிதம், மருத்துவம், விமான சாஸ்திரம், காலக் கணிப்பு. நாட்காட்டியெல்லாம் உலகுக்கு நாம் வழங்கிய பெரும் கொடைகளில் அடங்கும். என்னவகை உணவு உட்கொண்டால் என்ன குழந்தை பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை நவீன விஞ்ஞானம் ஆராய்ந்து சரியென்று சொல்லியிருக்கிறது. ஏராளமான இஸ்லாமிய தேசங்களின் வேர்கள் இந்து தர்மத்தில் இருக்கின்றன. இப்படி உன்னத நிலையில் இருந்த நம் பாரதத்தின் பொற்காலமானது காலனியக் களவாடல்கள் மூலம் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டது என்பதை இந்த நூல் ஆதாரபூர்வமாக ஆக்ரோஷத் தமிழில் விவரிக்கிறது.
Non-returnable
₹220.00
Details
Author
P.S.Narenthiran | பி.எஸ்.நரேந்திரன் Publisher
Naya Bharat Publications Genre
வரலாறு | History Number of Pages
206 Published On
2025 Edition
1st Edition