
Click To Buy Amazon
மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம்.
காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்ந்தபோது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல் என்ன, ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன, எப்படி எந்தச் சூழலில் மகாத்மாவின் உயிரைப் பறிக்கும் அராஜகமான முடிவுக்கு இந்தக் கூட்டத்தினர் வந்து சேர்ந்தார்கள், வழக்கு எப்படி நடைபெற்றது, வழக்கின் தீர்ப்பு என்ன என்பதையெல்லாம் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல்.
இந்தியாவில் அப்போது கிடைத்த குஜிலி இலக்கியத்தில் இருக்கும் மனவோட்டத்தைக் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன்.
இந்தியாவில் 1947ல் நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அருமையான புத்தகம்.