
ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.
இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதிலடியே ஆபரேஷன் சிந்தூர்,
இந்தியா 'சிந்தூர்' என்ற பெயரில் பெண்மையின் சக்தியோடு பதிலடி தந்தது.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெற்று வன்முறைத் தாக்குதல் மட்டும் அல்ல. சரியான, முறையான, துணிச்சலான எதிர்வினை. எதிரி நாட்டை அச்சத்திலும் உலக நாடுகளை வியப்பிலும் ஆழ்த்திய துல்லியமான நவீனமான போர்முறை.
பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த கணம் முதல் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி வரையிலான ஒவ்வொரு தொடியையும். அதே பரபரப்புடன், அந்தப் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், ராணுவத்தின் திட்டமிடல், அசாத்தியமான வியூகங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், உலக நாடுகளின் நிலைப்பாடுகள் என ஆபரேஷன் சிந்தூரின் முழுமையான செயல் வடிவத்தை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது.
இந்தப் புத்தகம் ஓர் இந்தியப் பெருமை மட்டுமல்ல, பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான அஞ்சலியும் கூட.