
Click To Buy Amazon
டெல்லியில் நடந்த நிர்பயா கொலை உலகையே அதிர வைத்தது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியது.
இது போன்ற கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், போலி என்கவுண்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இந்தியாவின் சட்ட முறைகள், காவல்துறையினரின் விசாரணைகள், தாமதமான தீர்ப்புகள் குறித்துப் நியாயமான கேள்விகளையும் எழுப்பின.
இந்தியாவை உலுக்கிய பல முக்கிய வழக்குகளின் முழு விவரங்களையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் ப.சரவணன். வழக்குகள் நடந்த காலகட்டங்கள், வழக்குகளின் குற்றப் பின்னணிகள், குற்றவாளிகளின் விவரங்கள், வழக்கு சார்ந்த சட்ட விதிகள், தீர்ப்பின் விவரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், வழக்குகளின் தற்போதைய நிலை என அனைத்தையும் தெளிவான நடையில் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம்.