
Click To Buy Amazon
நவீன நாடக உலகில் யதார்த்தா' நாடகக் குழுவிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்திய மொழிகளில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்களைத் தமிழில் மேடையேற்றி நாடெங்கும் கொண்டு சேர்த்தவர் யதார்த்தா பென்னேஸ்வரன். இந்தப் புத்தகத்தில் நான்க சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நாடகங்கள் அங்கத அவல நகைச்சுவைப் பாணியில், நாட்டின் அரசியல் நிலை, கல்வி ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளன. இந்த நாடகங்கள் நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள அதே சமயம் பல முக்கியக் கருத்துகளையும் எடுத்துரைக்கின்றன. புன்னகையையும் சிந்தனையையும் ஒரே சமயத்தில் தூண்டும் இந்த வகை நாடகங்கள் அரசியலை மையப்படுத்தி அங்கதம் செய்யச் சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றன. அந்த வகையில் 'நான்கு மேடை நாடகங்கள்' என்னும் இந்தப் புத்தகம் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு முக்கிய இடம்பெறும்.
₹300.00
Details
Author
Pennesan | பென்னேசன் Publisher
Swasam Publications Genre
Drama | நாடகங்கள் Number of Pages
248 Published On
2024 Edition
1st Edition Language
Tamil