
இளையராஜாவை இசைத் தெய்வமாக ஆராதிப்பவர்களுக்கும், ரஹ்மானின் 'முத்த மழை' பாடலைக் கிறுக்குப் பிடித்துக் கேட்பவர்களுக்கும், இந்தத் திரை இசை அலைகள் எழுந்த திரை இசைக் கடலின் இனிமைகளும் வரலாற்றுப் பரிமானங்களும் தெரிந்திருக்குமா? தெரிந்திருக்காது என்பதுதான் நிதர்சனம்.
திரை இசை கடந்து வந்த பல மைல்கற்களைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது திரை இசையின் பொற்காலம்' நூல்.
மாறி மாறி வரும் திரை இசைக் காலங்களை மறைத்திருக்கும் திரைகளை நீக்கி, நாம் மறந்துபோன திரைப்பாடல் நாயகர்களை இனம் காட்டுகிறது.
ஊமைத் திரைப்படம் தமிழ் பேசத் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை மிளிர்ந்த மிக முக்கியமான திரை இசை நாயகர்களின் வரலாற்றைப் பருந்துப் பார்வையில் சொல்கிறது இந்தப் புத்தகம்.
சுவாரஸ்யமான நிகழ்வுகள், அரிய படங்கள், நெடிய தேடல் சலியாத உழைப்பு இவற்றின் பலன் உங்கள் உள்ளங்கையில்,
திரை இசை தொடர்பான நூல்களுக்குப் பல பரிசுகளும் அங்கீகாரமும் பெற்ற வாமனன் எழுதி இருக்கும் இந்த நூல், திரை இசைச் சாதனைகளின் என்சைக்ளோபீடியா.