
அரசியல் விமர்சனத்தின் மிக முக்கியமான அங்கம் அங்கதம். துள்ளார். இதழில் 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் சத்யாவின் கட்டுரைகளின் அடிநாதம், மிகக் கூர்மையனை விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைப்பது. அதே சமயம் தான் சொல் வரும் கருத்தில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளாமல் இருப்பது. இந்த இரண்டும் இணையும்போது சத்யாவின் கட்டுரைகள் நகைச்சுவைத் தன்மையையும் சீரியஸ்தன்மையையும் ஒரே சமயத்தில் பெற்றுவிடுகின்றடை அரசியல் நையாண்டிக் கட்டுரைகள் மட்டுமின்றி இந்தொகுப்பில் மிக முக்கியமான கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 2019 முதல் 2021 வரையிலான கட்டுரைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சூழயின் காலக்கண்ணாடியாய் விளங்கும் இக்கட்டுரைகள், எக்காலத்திலும் செல்லுபடி ஆகக் கூடியவையாக இருக்கின்றன என்பதை நூலாசிரியனின் எழுத்துத் திறம் என்றும் சொல்லலாம், நம் அரசியலின் தலைவிதி என்றும் சொல்லலாம்