
சைவ சமயமும் சிவ வழிபாடும் மிகப் பழமையானவை. காலம் கணிக்க முடியாதவை. சைவ சமயத்தின் பெருமைகள் எண்ணற்றவை. அத்தகைய சமயத்தின் பெருமைகளைப் பக்திப் பரவசத்தோடும் தேர்ந்த மொழி நடையிலும் அழகுற எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.சைவ சமயத்தின் தொன்மை. சிவ வழிபாட்டின் மேன்மை எனப் பக்தி வரலாற்றின் வழியே, சமயம் வளர்த்த நல்லோர்கள் குறித்தும் இப்புத்தகம் பதிவு செய்கிறது.
சிவ பெருமானின் திருவிளையாடல்கள், சிவ தத்துவம், சிவ வழிபாட்டு முறைகள், சிவனுக்குரிய திருவிழாக்கள், சங்க இலக்கியத்தில் சைவ சமயத் தத்துவம் என சிவ பெருமானின் பெருமைகளைக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர் ப.சரவணன்.
'சிவ வரலாறே சைவ வரலாறு' என்பதைப் பறைசாற்றுகிறது இந்தப் புத்தகம்,
₹220.00
Details
Author
P.Saravanan | ப.சரவணன் Publisher
Swasam Publications Genre
Religion | மதம் Number of Pages
175 Published On
2024 Edition
1st Edition Language
Tamil