
Click to Buy Google Play | Libro.FM | Nook Audiobooks | Audiobooks.com | Kobo.Walmart
தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன்.அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது.











