
சோழர்களின் கடல்போர் திறமையையும் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே எடுத்துக்காட்டுவது ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு. இன்றைய மலேசியாவான அன்றைய சுடாரத்துக்கு, பல ஆயிரம் வீரர்கள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், குடிநீர் ஆகியவற்றோடு, புயலைத் தாங்கும் வலிமையுடன் கட்டப்பட்ட போர்க் கப்பல்களில் பயணம் செய்து, அங்கே நடந்த போரில் பெரும் வெற்றியை அடைந்தான் ராஜேந்திர சோழன், இந்தக் கடும் பயணமும் பெரும் வெற்றியும் எப்படிச் சாத்தியமானது? இதுவே இந்த நாவலின் களம். கடாரப் போரையும், கடல் சாகசப் பயணத்தையும், அதில் ராஜேந்திர சோழனும் வீரர்களும் சந்தித்த சோதனைகளையும், அதைச் சமாளித்த தீரத்தையும், நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விரிவாகவும் ஆதாரத்துடன் இந்தச் சரித்திர நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஸ்ரீமதி.