
"பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல், வங்க மூல நாவலான 'ஆஷானி சங்கேத்' நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது.இந்நாவலில், பஞ்சம் எடுத்தஎடுப்பிலேயேநம்மைப்பதறச்செய்யும் நோக்கத்தில் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக. எளிமையான உரையாடல்கள் மூலமும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வது மூலமும் மெல்ல மெல்லப் பஞ்சம் அறிமுகமாகிறது. தெளிவான நீர் உள்ள குளம் ஒன்றில் மெல்ல மெல்லப் படரும் வெங்காயத் தாமரை போல. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பஞ்சத்தின் தீவிரமும் நம்மை வந்தடையும்போதுவார்த்தைகளால் விவரிக்க முடியாத பதற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களைத் தவிர, இம்மனிதர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும், நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒத்ததுதான். அதனால் இந்நாவலை நம் ஊரில் நிகழும் ஒரு கதை என்ற அளவில் நம்மால்எளிதாக அணுக முடிகிறது. இதை மொழிபெயர்த்திருக்கும் சேதுபதி அருணாசலம், இந்நாவல் எளிமையாகவும் அதேசமயம் ஆழமாகவும் இருக்கவேண்டும் என்பதில் காட்டி இருக்கும் தீவிரத்தை, இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரக்கூடும்.