
போர்க்களத்தில் சந்திப்போம்' என வீரபாண்டியன் அறைகூவல் விடுக்க, அதன் பொருட்டு இருபுறமும் மேற்கொள்ளப்படும் போர் ஆயத்தப் பணிகளும், இறுதியில் நிகழும் ரத்தச் சரித்திரமுமே இந்நாவல்.
வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், அருமொழிவர்மன், குந்தவை என மாபெரும் வரலாற்று ஆளுமைகளை நாவலில் உயிர்ப்புடன் உலவவிட்டு, நம்மை அக்காலத்திற்கே அழைத்துச் செல்கிறார் சிரா.
அக்காலப் போர்களில் பயன்படுத்தப்பட்ட பல்வகைப்பட்ட ஆயுதங்கள். போர் யுக்திகள், ஒற்றறிதல் முறைகள். சதி ஆலோசனைகள், போருக்கான பல்வேறு நடைமுறைகள் எனப் புத்தகமெங்கும் வரலாற்றுத் தகவல்கள் கற்பனை கலந்து சொல்லப்பட்டுள்ளன.
நாவலின் இறுதியில் இடம்பெற்றுள்ள போர்க்களக் காட்சிகள் உண்மையில் நம்மை உலுக்கிவிடுகின்றன. இது வெறும் போர்க் கதையல்ல; அதிகாரம், வீரம், துரோகம் மற்றும் அன்பின் ஆழமான சரித்திரம்.