
ஒரு நாட்டின் வரைபடம் என்பது ராணுவம், அரசியல், கல்வி, வியாபாரம், பாதுகாப்பு என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் மிகவும் அவசியமானது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட இந்திய வரைபடம் உருவான அசாத்திய நிகழ்வைக் குறித்த வரலாறே இந்தப் புத்தகம். 1800ம் ஆண்டு துவங்கிய இந்திய வரைப்பட உருவாக்கத்தின் பணி முழுமையடைய நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இதன் பின்னால் பலரது கடினமான உழைப்பும் அசாத்தியமான அர்ப்பணிப்பும் உள்ளன. தொழில்நுட்ப உதவியோ, முறையான பாதைகளோ இல்லாமல், சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான மைல்கள் காடு, மலை, நதி எனப் பல கடினமான இடங்களில் பயணம் செய்து, பல சோதனைகளையும் உயிரிழப்புகளையும் கடந்து இந்தியாவின் வரைபடம் உருவானது. கற்பனைக்கெட்டாத இந்தச் சாதனைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் வரலாற்று ஆதாரத்துடனும் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம், இன்று இந்தியா என்று பெருமைப்படும் நாம் எல்லோரும் அறியவேண்டிய முக்கிய வரலாற்று ஆவணம் இந்தப் புத்தகம்.