
ஐரோப்பியப் புராணங்களும் சட்டுத்தனமான நம்பிக்கைகளும்’ என்ற இந்த நூல், ஐரோப்பியர்களின் புதிர் நிறைந்த தொன்ம உலகுக்குள் ஒரு சுவாரஸ்யமான பயணமாக அமையும். சிந்தனையும் நகைச்சுவையும் ஒருசேர நிறைந்த இந்தப் புத்தகம், ஐரோப்பியச் சமூகத்தின் புகழ்பெற்ற புராணக் கதைகள், விசித்திர நம்பிக்கைகள் மற்றும் அவற்றின் பின்னணிகளை ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரசியமாகச் சொல்கிறது. ஐரோப்பியர்களைப் பற்றி அறிந்திராத பல தகவல்களை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
விகடன் வலைத்தளத்தில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த நூலின் ஆசிரியர் றின்னோஸா, புவிசார் அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் சமூகவியல் போன்ற வேறுபட்ட தளங்களில் பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதி வருபவர்.