
* தமிழில் எழுதும்போது பிழையில்லாமல் எழுத நினைக்கிறீர்களா?
* எளிமையான புத்தகம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா?
* ஒரு நண்பனைப் போல அருகே இருந்து பொறுமையாக, இனிமையாகச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா?
* மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஒரே புத்தகமாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம் இதுதான்.
நா.கோபாலகிருஷ்ணன் ஒரு நண்பனைப் போலச் சொல்லித் தருகிறார். தமிழில் பிழையின்றி எழுத இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.
அடிப்படை இலக்கணத்தைச் சொல்லி, அதன்பின்னர் பிழையின்றி எழுதச் சொல்லித் தருகிறார் இந்த நூலின் ஆசிரியர். அதனால் படித்தது மறக்கவே மறக்காது என்று உறுதியாகச் சொல்லலாம்.