
சிறு வயதிலிருந்தே யோகா குறித்துப் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், பலர் அதனை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக ஆக்கிக் கொள்வதில்லை.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட யோகா குறித்த அறிமுகக் குறிப்புடன், சூரிய நமஸ்காரம் தொடங்கி, புஜங்காசனம், சலபாசனம், மத்ஸ்யாசனம் எனப் பல்வேறு ஆசனங்கள் குறித்தும், அதனை முறையாக எவ்வாறு செய்து பழக வேண்டும் என்பது குறித்தும் எளிய தமிழில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் தங்கலக்ஷ்மி.
சுவாசிக்க ஒவ்வொரு ஆசனத்தின்போதும் எவ்வாறு வேண்டும், அந்த ஆசனங்களால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன, யார் யாரெல்லாம் எந்த எந்த ஆசனங்களைத் தவிர்க்க வேண்டும், எப்பொழுது ஆசனங்களைச் செய்யவேண்டும் என விளக்கமாகக் கூறுகிறார் ஆசிரியர்
ஒவ்வொரு ஆசனமும் தகுந்த படங்களுடன் விளக்கப் பட்டுள்ளதால், புரிந்துகொள்வது எளிதாகிறது.
யோகாசனங்களைப் பயிற்சி செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தளர்வுப் பயிற்சிகள் குறித்து விரிவாகக் கூறியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்புகளுள் ஒன்று.