
ஜெயராமன் ரகுநாதன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். மூன்று ஸ்டார்ட் அப்கள் தொடங்கி நடத்தியவர். இவர் மூன்றாவதாகத் தொடங்கிய ஸ்டார்ட் அப் இன்றும் நிலையாக நடந்து வருகிறது. ஹிந்துஸ்தான் லீவர், டிவிஎஸ் நிறுவனங்களில் மேலாளர், பொது மேலாளர் மற்றும் துணைத் தலைவராகப் பதவி வகித்து 30 ஆண்டுகள் பணியாற்றியவர். ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகள் நடத்தியவர். இப்போது அந்த கம்பெனியின் டைரக்டராகப் பணிபுரிந்து வருகிறார். மார்க்கெட்டிங், விற்பனை விரிவாக்க மேலாண்மை, ERP என்னும் கம்பெனி தழுவிய மென்பொருள் ஆலோசனை ஆகிய துறைகளில் விற்பன்னர். கல்லூரிகளுக்குப் பேச்சாளராகச் சென்று மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தரும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றி வருபவர். பல கல்லூரிகளில் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர். 2010ல் வளரும் தொழில்முனைவோராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.