
ஸ்டோய்சிசம் என்பது பண்டைய கிரேக்கத்தில் பொயுமு 300ம் ஆண்டு ஜீனோ (Zeno of Citium) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தத்துவமாகும். இது நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த ஒரு தத்துவம்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், சவால்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை, நிதானத்தோடு எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்வது எப்படி என்று ஸ்டோய்சிசம் நமக்குக் காட்டுகிறது.
சிறுவர் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற இந்தத் தத்துவத்தை இந்தப் புத்தகம் பல உதாரணங்களோடு சரளமான நடையில் எடுத்துச் சொல்கிறது.
நீங்கள் அடையத் துடிக்கும் வெற்றியின் வரைபடத்தை ஸ்டோய்சிசம் மூலம் இந்தப் புத்தகத்தில் நீங்கள் கண்டடையலாம்.











