
சிரிக்கத்தெரிந்தவன் மக்களினம், சிரிக்க மறந்தவன் மாக்களினம், சிரிப்பு என்பது இறைவன் கொடுத்த வரம், அந்த வரத்தை நமக்கு தந்தவர்கள் இறைவனுக்குச் சமம்.
துக்கத்தில் கண்ணீர் வரும். துயரத்தில் கண்ணீர் வரும். கஷ்டத்தில் கண்ணீர் வரும் நஷ்டத்தில் கண்ணீர் வரும். ஆனால்! சிரிக்க வைத்து கண்ணீரை வரவழைப்பவர்கள் தான் நகைச்சுவை நடிகர்கள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். சிரிக்க வைத்து நோயைப் போக்குபவர்கள் மருத்துவர்களுக்குச்சமமாவார்கள் அகச்சுவையில் ஆழமானது நகைச்சுவை ஒன்றுதான், உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்கள், ஒருசிலரதுவாழ்க்கை வரலாறுகளையும், அவர்கள் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது இப்புத்தகம்,
வாங்குங்கள்..! வாசியுங்கள்!!











