
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் ஒரே குறிக்கோள், தம் வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி வேங்கடாசலபதியைத் தரிசித்துவிடவேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட பெருமைமிகு திருப்பதியைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் பக்திப் பரவசத்தோடு சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். திருப்பதியின் தல வரலாறு, புராண வரலாறு, ஏழுமலையானின் பெருமை, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், கீழ் திருப்பதி எனப்படும் தாயார் சன்னதியின் வரலாறு என திருப்பதி குறித்த ஒரு பருந்துப் பார்வையை இந்தப் புத்தகம் நமக்கு அளிக்கிறது. திருப்பதியில் நிகழும் பல திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், அவற்றில் பங்குபெறுவதற்கான வழிமுறைகள், அங்கே நாம் அவசியம் காணவேண்டிய பிற கோயில்கள் போன்ற பல தகவல்களைத் திரட்டித் தரும் இந்தப் புத்தகம், திருப்பதி கோவிலின் முழுமையான வழிகாட்டி!











