
ஐயன்பெருமாள் அவர்கள் எழுதி, பள்ளிப்பாடத் திட்டத்தில் இருந்த நூல் சங்ககாலப் பாண்டியர். சங்ககாலம் குறித்தும், சங்க காலத்தில் அரசர்களாய் இருந்த மூவேந்தர்களில், பாண்டிய அரசர்கள், பாண்டிய நாடு எது என்பது குறித்தும் அறிமுகம் செய்கிறது இந்நூல்.
தமிழின் பழமைக்கு முதன்மை ஆதாரமாய் இருப்பவை, சங்க இலக்கிய நூல்களே. சங்க இலக்கியங்களில் இருந்து பெறப்படும் குறிப்புகளில் இருந்துதான், மூவேந்தர்களின் வம்சாவளியை வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். நற்றிணை, புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை போன்ற தொகைநூல்களின் வழியாக, பாண்டிய அரசர்கள் பற்றிய காட்சியை கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.











