Swasam
0
Maaravarman Avani Soolaamani | மாறவர்மன் அவனி சூளாமணி

Maaravarman Avani Soolaamani | மாறவர்மன் அவனி சூளாமணி

நூலாசிரியரைப் பற்றி ...
இந்தப் புதினத்தின் ஆசிரியரான திருமதி, புவனா சந்திரசேகரன்.
மதுரையைச் சேர்ந்தவர். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப் பட்டம்
பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் மற்றும் புதினங்கள்
எழுதி வரும் இவர் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.
வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள் மற்றும் சிறார் கதைகள் எழுதி
வருகிறார். வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன.
பல்வேறு புதினங்கள் அச்சில் வெளிவந்துள்ளன. கங்கை புத்தக நிலையத்தின்
தொடர் ஆதரவுடன் அச்சில் வரும் பதினொன்றாவது நூல் இது.

கதையைப் பற்றி ...
களப்பிரர் பிடியில் இருந்து ஆட்சியை மீட்டு மதுரையில் அரியணையில்
அமர்ந்த மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த அவனி
சூளாமணியின் கதை இது. அன்றைய காலகட்டத்தில் இருந்த பல்வேறு
பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டின் பொருளாதாரம், வணிகம், பாதுகாப்பு
என்று பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தை விதைத்து நல்லாட்சி
வழங்கியவன் சூளாமணி.
அரியணையில் அமர்ந்ததில் இருந்து திறமையாக ஆட்சி செய்து
மக்களின் அன்பைச் சம்பாதித்தவன். சூளாமணியின் வாழ்நாளில் நடந்த சில
சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை இந்தக் கதை. பாண்டிய
வம்சத்தின் ஆட்சி, பல்வேறு நூற்றாண்டுகள் தொடர்ந்தது. பாண்டியரின்
புகழும், அவர்களுடைய மீன்கொடியைப் போலவே எட்டுத் திக்கும் பறந்து
ஒளி வீசியது.
₹334.80 ₹360.00
Customize
Publisher
Vanathi Pathippagam
Language
Tamil
Author
Bhuvana Chandrasekaran | புவனா சந்திரசேகரன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.