தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தொன்மச் சிறுகதைகளுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தொன்மம் சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கிறார்கள். அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்களும் தொன்மத்தைச் சமகாலத்திற்கு நகர்த்தி, அதன்மீது மறுவாசிப்பை நிகழ்த்திப் புனைவுகளை எழுதி வருகிறார்கள். தொன்மங்கள் புனைகதைகளுக்குக் கருவை உற்பத்திச் செய்துதரும் சுரங்கங்களாக இருக்கின்றன. காவியங்கள் புறக்கணித்த சிறு கதாபாத்திரத்தையும் நவீன இலக்கியங்கள் தூலமாக முன்னிறுத்தின. சீதை, ஊர்மிளை, சூர்ப்பணகை, இராவணன் உள்ளிட்டோர் தன் தரப்பைப் பகிர்ந்து கொள்ளவும் நவீன இலக்கியங்களே உதவின 'யாராய் வேண்டுமானாலும் பிறக்கலாம்: ஆனால் ராமனாய் மட்டும் பிறக்கவே கூடாது!' என்ற இராமனின் கருத்தையும் நவீன இலக்கியங்கள் பொருட்படுத்தின. அந்த வகையில் இந்தத் தொகுப்பு இராமாயணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்புச் செய்வதற்கும் இராமாயணப் பிரதிகள் கவனப்படுத்தாமல்போன பக்கங்களை மறுகண்டுபிடிப்புச் செய்வதற்கும் உதவும் என்று நம்புகிறேன்.
Non-returnable
Rs.300.00
Details
Author
Subramani Ramesh | சுப்பிரமணி ரமேஷ்
Publisher
Aadhi Pathippagam
Genre
Short Stories | சிறுகதைகள்
Published On
2025
Language
Tamil
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.