Suzhal (Or Unmaik Kadhai) | சுழல் (ஓர் உண்மைக் கதை)
அவளுக்கு வேறு வழியில்லை. அமைப்பின் முன்னால் மண்டியிட வேண்டும் அல்லது போராட வேண்டும். குட்டி போராடுவாள் என நம்புகிறேன். - சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி இங்குள்ள நீதி அமைப்புகள். அதிகார அமைப்புகள் பலமற்றவர்களிடம் எப்படி கருணையற்று நடந்துகொள்கின்றன என்று அப்பட்டமாகப் பேசுகிறது இந்த படைப்பு. - எழுத்தாளர் கரன் கார்க்கி ஒரு குற்றத்தின் பின்னணியை விவரிக்கும், நடந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் முதல் தகவல் அறிக்கையைப் போன்று. நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக அடுக்கி, மனிதர்களின் எண்ண ஓட்டங்களை. அவர்தம் பார்வைகளை எடுத்துரைத்துச் சொல்லும் வகையில், வாசகரையும் நீதிக்கான போராட்டத்தில் இணைய வைக்கிறது 'சுழல்'. - தோழர் செல்வா, சமூக ஆர்வலர். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் CPIM 'லாக்கப்' காவல் நிலையத்தின் ஆவணமற்ற இருட்பிரதேசத்தைக் குறிக்கிறது என்றால். தங்கலட்சுமியின் 'சுழல்' காவல்துறை வெகுமக்களை எப்படி வஞ்சிக்கிறது, எத்தகைய தகிடுதத்தங்களை ஏன் எப்படி செய்கிறது என்பதை துல்லியமாக ஆவணப்படுத்துகிறது. - எழுத்தாளர் லாக்கப் மு.சந்திரகுமார்